யம்மாடியோவ்… 7 அடி நீளம் ராட்சத மீன்… ரூ.36 லட்சத்துக்கு ஏலம்…

Published : Oct 26, 2021, 10:13 PM IST
யம்மாடியோவ்… 7 அடி நீளம் ராட்சத மீன்… ரூ.36 லட்சத்துக்கு ஏலம்…

சுருக்கம்

மேற்கு வங்கத்தில் 7 அடி நீளம் கொண்ட ராட்சத மீன் ஒன்று 36 லட்சத்துக்கு ஏலம் போய் இருக்கிறது.

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 7 அடி நீளம் கொண்ட ராட்சத மீன் ஒன்று 36 லட்சத்துக்கு ஏலம் போய் இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் நம்பர் 24 பர்கானா மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியில் கப்புரா ஆற்றில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களது வலையில் ராட்சத மீன் ஒன்று சிக்கியது. டெலியா போலா என்ற வகை கொண்ட அந்த மீன் 7 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

அதாவது ஒரு மனிதனின் உயரத்தை விட அதிகம். கிட்டத்தட்ட 78.4 கிலோ இருந்துள்ளது. இந்த ராட்சத மீன் கன்னிங் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

மீனை கண்ட பலரும் ஆச்சரியம் அடைந்து ஏலத்துக்கு நான், நீ என முந்தினர். மருத்துவ குணம் கொண்ட மீனாக கருதப்படும் இந்த மீன் 36 லட்சத்து 53 ஆயிரத்து 605 ரூபாய்க்கு ஏலம் போய் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

கன்னிங் மார்க்கெட்டில் இப்படி ஒரு ராட்சத மீன் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!