மோடியைப் போன்று டீ விற்று துணை முதல்வரான கே.பி. மவுரியா

 
Published : Mar 19, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
மோடியைப் போன்று டீ விற்று துணை முதல்வரான கே.பி. மவுரியா

சுருக்கம்

kp mauriya became deputy cm of tn

உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர்களில் ஒருவரான கேசவ் பிரசாத் மவுரியா கவுசாம்பி மாவட்டத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பிரதமர் மோடி சிறு வயதில் எப்படி தந்தையின் தேநீர் கடைக்கு உதவியாக இருந்தாரோ அதேபோன்று, கே.பி.மவுரியாவும் தனது தந்தையின் தேநீர் கடைக்கு உதவியாக இருந்து டீ சப்ளை செய்துள்ளார், காலை நேரத்தில் நாளேடுகளையும் வீட்டுக்கு வீடு அளிக்கும் பணியையும் செய்து, பள்ளியில் படித்து வந்தார்.

சிறுவயதாக இருக்கும்போதே  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பால ஸ்வயம் சேவக்கில் சேர்ந்து மவுரியா பணியாற்றினார். அதன்பின், விஷ்வ இந்து பரிசத் , பஜ்ரங் தல் அமைப்பிலும் மவுரியா இணைந்து பணியாற்றினார். ஏறக்குறைய 12 ஆண்டுகள் வி.எச்.பி, பஜ்ரங் தல் அமைப்பில் இருந்ததால், வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்காலுக்கு மிகவும் நெருக்கமானவராக மவுரியா மாறினார்.

அதன் பின் 2012ம் ஆண்டு சிராத்து தொகுதியில் எம்.எல்.ஏ.வாக மவுரியா தேர்வு செய்யப்பட்டார். 2014ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புல்பர் தொகுதியில் போட்டியிட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள யாதவர்கள் அல்லாத சமூதாய மக்களிடம் மவுரியாவுக்கு ஆதரவு இருந்தது. இவர் மூலமாகவே மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு பா.ஜனதா தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.  இதனால், கட்சிக்குள் படிப்படியாக முன்னேறினால். பாஜனதா வெற்றிக்கு பின், முதல்வர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துணை முதல்வராக கே.பி. மவுரியா ஆகியுள்ளார்.

கல்லூரி பேராசிரியர் தினேஷ் சர்மா

துணை முதல்வரான 53வயது தினேஷ் சர்மா லக்னோ பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையின் பேராசிரியாக பணியாற்றியவர். பாரதியஜனதா கட்சியின் நீண்ட கால உறுப்பினரான தினேஷ் சர்மா ஒரு பிராமணர். தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்.

 

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கட்சி சிறப்பான வெற்றி பெற்றதையடுத்து, தேசிய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். குஜராத்தில் பாரதியஜனதா கட்சியின் பொறுப்பாளராக இருந்து சிறப்பாக தினேஷ் சர்மா பணியாற்றியதால், பிரதமர் மோடி, அமித் ஷாவின் நம்பிக்கையைப் பெற்றார்.

2008ம் ஆண்டு லக்னோ நகர மேயராக தினேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார். பாரதிய ஜனதா கட்சிக்கு நாடுமுழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தில் இவரின் நடவடிக்கையால் 10 கோடி தொண்டர்கள் சேர்ந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கொடுத்த அடியை இந்தியா ஒருபோதும் மறக்காது..! பீலா விடும் ஷாபாஸ் ஷெரீப்
விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?