லாரி மோதி சிறுவன் பலியான விபத்து... டிரைவருக்கு டெல்லி நீதிமன்றம் அதிர்ச்சித் தீர்ப்பு - தீர்ப்புனா இப்படித்தான் இருக்கனும்…!!

 
Published : Mar 19, 2017, 04:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
லாரி மோதி சிறுவன் பலியான விபத்து... டிரைவருக்கு டெல்லி நீதிமன்றம் அதிர்ச்சித் தீர்ப்பு -  தீர்ப்புனா இப்படித்தான் இருக்கனும்…!!

சுருக்கம்

diffrent judgement in accident case

டெல்லியில் கவனக்குறைவாக லாரி ஓட்டி, சிறுவன் மீது ஏற்றி விபத்து ஏற்படுத்திய டிரைவரின் ‘லைசன்ஸை’ ரத்து செய்த டெல்லி நீதிமன்றம், வாழ்நாள் முழுவதும் எந்தவிதமான வாகனம் ஓட்டவும் கடுமையாக தடை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

சிறுவனம் பலி

கடந்த 2000ம் ஆண்டு, ஆக்ஸ்ட் 31-ந்தேதி டெல்லியில் உள்ள சாமெய்பூர் பாதில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் சிறுவன்,தனது தந்தையுடன் வீட்டுக்கு சென்றான். அப்போது,சுனில்குமார் மிஸ்ரா என்பவர் ஓட்டி வந்த லாரி, அந்த சிறுவனம் மீது மோதியதில், தந்தை கண்முன்னே அந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் பலியானான்.

லாரி ஓட்டி வந்த சுனில் குமார் மிஸ்ரா உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப் கார்க் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு  மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

குற்றவாளி

இது தொடர்பான வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், டிரைவர் தரப்பிலோ, வாகனத்தை வேகமாக ஓட்டவில்லை, அந்தபகுதி நெரிசல் மிகுந்த பகுதி என்றும், தான் வேகமாக லாரி ஓட்டியதற்கான ஆதாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால், இதை நிரூபிக்க டிரைவரின் தரப்பு வழக்கறிஞர்கள் தவறியதையடுத்து, டிரைவர் சுனில்குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன் தினம் நீதிபதி அர்ச்சனா சின்ஹா தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது-

வாழ்நாள் தடை

சுனில் குமார் மிஸ்ரா கவனக்குறைவாக லாரி ஓட்டி, சிறுவனம் உயிரழப்பு ஏற்படக் காரணமாக இருந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இவருக்கு இவரின் வாகன ஓட்டும் உரிமத்தை ரத்து செய்து, புதிதாக எந்தவிதமான உரிமமும் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிடுகிறேன். இனி வாழ்நாளில் எந்த ஒரு வாகனத்தையும் சுனில் குமார் ஓட்டக்கூடாது. இது தொடர்பான உத்தரவை நாடுமுழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களுக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன்.

ஒரு ஆண்டு சிறை

குற்றவாளியான சுனில் குமாருக்கு மாஜிஸ்திரேட் 18 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், அவரின் குடும்ப நிலை கருதி ஒரு ஆண்டாக குறைக்கிறேன். இந்த வழக்கில் சிறுவனை இழந்த அவரின் தந்தை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளார். அவர் இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பி இருந்தாலும், தன் கண்முன்னே மகனின் உயிரை பறிகொடுத்துள்ளார்.

துரதிருஷ்டம்

இது மிகவும் துரதிருஷ்டமான விசயம், வேதனையான விசயம். அந்த சிறுவனின் தந்தை என்பதற்காக நேரில் கண்ட சாட்சியை நாம் நம்பாமல், உதாசீனப்படுத்த முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓலா, உபெர்-க்கு டஃப் கொடுக்க வரும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் அதிரடி ஆரம்பம்!
சீன ஜி.பி.எஸ் கருவியோடன் வந்த பறவை.. கடற்படை தளம் அருகே பிடிபட்டதால் பரபரப்பு!