
மோசமாக செயல்படும் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களின் கல்வி புகட்டும் திறனை வளர்த்துக்கொள்ளத் தவறினால், அதை மூடவோ அல்லது சிறப்பாகச் செயல்படும் மற்ற கல்வி நிறுவனங்களோடு இணைக்கவோ அரசு திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட்டில் சீர்திருத்தம்
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதில் யு.ஜி.சி. உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களுக்கான சீர்திருத்தங்களைவௌியிட்டதில் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
3 பிரிவு
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான சீர்திருத்த திட்டங்களை பல்கலைக்கழக மானிய குழு(யு.ஜி.சி.) செயல்படுத்த தயாராகி வருகிறது. இதன்படி, அனைத்து கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழங்களையும் தனிக்கை முறை செய்ய திட்டமிடப்பட்டு, செயல்பாட்டு திறன் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளன.
முதல்பிரிவு
அதாவது, ‘மிகச்சிறப்பாக செயல்பாடு’, ‘வளர்சிக்கு வாய்ப்பு’ மற்றும் ‘மோசமான செயல்பாடு’ ஆகிய 3 பிரிவுகளாக பிரிக்கப்பட இருக்கிறது. மிகச்சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம், மானியங்கள், நிதிகள் ஒதுக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படும்.
2-ம் இடத்தில் வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களின் குறைகளை சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ளச் செய்வது.
எச்சரிக்கை
3-வது பிரிவில் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களை கண்டுபிடித்து, அவற்றின் கல்வி கற்பிக்கும் திறன், செயல்பாட்டு திறனை மேம்படுத்திக்கொள்ள காலம் கொடுப்பது. அதை தவறவிட்டால், சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழங்கள், கல்லூரிகளுடன் அவற்றை இணைத்து விடுவது. அல்லது மூட உத்தரவிடுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.