"தோல்வியை நினைத்து கவலை வேண்டாம்... தொடர்ந்து போராடுவோம்..!!" - கெஜ்ரிவால் அதிரடி…

First Published Mar 19, 2017, 3:18 PM IST
Highlights
kejriwal encouraging his cadres


பஞ்சாப் ,கோவா மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும்   ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும் என, அரவிந்த் கெஜ்ரிவால் வலியுத்தியுள்ளார்.

பஞ்சாப் மற்றும் கோவா மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக களமிறங்கியது. பஞ்காபில் ஆட்சியைப் புடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூட தகவல்கள் வெளியாகின.

ஆனால் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் அங்கு ஆட்சியில் இருந்த பாஜக வை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை ஆம் ஆத்மி கட்சி பிடித்தது பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையிவ் சமூக  வலை தளம் மூலம் தொண்டர்களிடம் பேசிய கெஜ்ரிவால். உண்மையின் பாதையில் ஊழலுக்கு எதிரான போரை தொண்டர்கள்  நடத்தி வருவதாக தெரிவித்தார்.

ஆனால், ஊழலை மூலதனமாக கொண்ட பல அமைப்புக்கள் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு எதிராக உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற ஏற்ற தருணம் விரைவில் வரும் என்று கூறிய கெஜ்ரிவால் உண்மை தோற்கலாம், ஆனால், இறுதியில் அது தான் வெல்லும் என்நும் தெரிவித்தார்.


பஞ்சாப், மற்றும  கோவா தோல்விகள் தற்காலிகமானவைகள் தான் என்று தெரிவித்த கெஜ்ரிவால்,  பஞ்சாப் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அம்ரீந்தர்சிங், அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஆம் ஆத்மி தொண்டர்கள் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

click me!