நபிகள் நாயகத்தை அவமதித்த வழக்கு... நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்!!

By Narendran S  |  First Published Jul 6, 2022, 4:37 PM IST

நபிகள் நாயகத்தை அவமதித்தது தொடர்பான வழக்கில் நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.


நபிகள் நாயகத்தை அவமதித்தது தொடர்பான வழக்கில் நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நுபுர் சர்மா நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நர்கெல்டங்கா காவல் நிலையத்திலும், பின்னர் கொல்கத்தா காவல்துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஆம்ஹெர்ஸ்ட் தெரு காவல் நிலையத்திலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தனிநபர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா காவல்துறையின் அதிகார வரம்பில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களின் கீழ் சர்மா மீது 10 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் காவல்துறையில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் நுபுர் ஷர்மா இரண்டு சம்மன்களையும் புறக்கணித்து, காவல்துறையில் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரினார்.

இதையும் படிங்க: காளி போஸ்டர்: மஹுவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு

Latest Videos

தொடர்ந்து நான்கு முறை அழைப்பு விடுத்தும் விசாரணைக்கு ஆஜராகாததால், கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டது. பல முறை சம்மன் அனுப்பியும் எங்கள் அதிகாரிகள் முன் ஆஜராகாததால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆம்ஹெர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்கள் தனித்தனியாக அவருக்கு சம்மன் அனுப்பியதாகவும் இரண்டு காவல் நிலையங்களும் தலா இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 2வது திருமணம் செய்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.. பெண் யார் தெரியுமா ?

இந்த நிலையில் கொல்கத்தா காவல்துறை, நூபுர் சர்மாவுக்கு, ஜூலை 11 ஆம் தேதி நகர காவல்துறையின் கிழக்கு புறநகர்ப் பிரிவுக்குட்பட்ட நர்கெல்டங்கா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டது. முகமது நபியைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து விசாரிக்க கொல்கத்தா காவல்துறை நுபுர் ஷர்மாவுக்கு அனுப்பிய மூன்றாவது நோட்டீஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அச்சுறுத்தல் அச்சத்தின் அடிப்படையில் நுபுர் ஷர்மா இரண்டு முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகவில்லை. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் ஜூலை 11 ஆம் தேதி நர்கெல்டங்கா காவல் நிலையத்தில் ஆஜராவாரா அல்லது மீண்டும் அதே அடிப்படையில் தனது இயலாமையை வெளிப்படுத்துவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

click me!