3 மணி நேரமாக பெண்ணின் காலை சுற்றியிருந்த ராஜநாகம்.. ஆனா கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Published : Aug 29, 2023, 03:55 PM IST
3 மணி நேரமாக பெண்ணின் காலை சுற்றியிருந்த ராஜநாகம்.. ஆனா கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவரின் காலில் 3 மணி நேரம் ராஜநாகம் சுற்றியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் உள்ள தஹரா உள்ள தனது தாய் வீட்டில் மித்லேஷ் யாதவ் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தனது காலில் ஒரு ராஜ நாகம் ஒன்று சுருண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் பாம்பு தன்னை விட்டு வெளியேற 3 மணி நேரம் அப்பெண் கைகளை கூப்பி பிரார்த்தனை செய்துள்ளார். நேற்று காலை தனது காலில் ஒரு அசாதாரணமாக் ஏதோ இருப்பது போல் உணர்ந்ததாகவும், அப்போது அவருக்கு தனது காலில் ஒரு ராஜ நாகம் சுற்றியிருப்பது தெரியவந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "நான் எனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தேன், நான் எழுந்தபோது, பாம்பு என் காலைச் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.. நான் என் தாயிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன், பாம்பு வெளியேறும் வரை பல மணி நேரம் காத்திருந்தேன்,” என்று தெரிவித்தார்.

சீனாவின் புதிய வரைபடத்தில் அருணாசலப் பிரதேசம்; ஜி20 மாநாட்டுக்கு முன்பு இந்தியாவை உசுப்பும் பீஜிங்!!

பாம்பு வெளியேறும் வரை 3 மணி வரை காத்திருந்ததாக கூறிய அவரிடம், அப்போது அவர் மனதில் என்ன இருந்தது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ பாம்புகளை விரும்புவதாக அறியப்படும் இந்து கடவுளான சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வதாக கூறினார். " அந்த 3 நேரமும் நான் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன், வந்ததைப் போலவே பாம்பு வெளியேற வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிகொண்டேன். “ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் "ஒரு கணம், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன். என் குழந்தைகளைப் பற்றியும், நான் இறந்தால் அவர்களை யார் கவனிப்பார்கள் என்றும் நினைத்தேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். எனது நலனுக்காக எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்,” என்று தெரிவித்தார். எனது வீட்டில் இருந்த அனைவரும் எனக்கு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

இதனிடையே அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அப்பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரைத் தொடர்பு கொண்டனர். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், உலகின் மிக நீளமான விஷப் பாம்பு என்று அழைக்கப்படும் ராஜ நாகர், அந்தப் பெண்ணின் காலில் இருந்து தன்னைத் தானே அவிழ்க்க ஆரம்பித்து, பாம்பு பிடிப்பவர் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறியது. அது யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வீட்டிற்கு வெளியே சென்றதால், பாம்பு பிடிப்பவர் அதைப் பிடித்து காட்டில் விட்டார். எனினும் பாம்பு ஒரு பெண்ணின் காலில் 3 மணி நேரம் சுற்றியிருந்ததும், பின்னர் தானாக வெளியேறியதும் அப்பகுதியில் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
LPG Scam Alert: Indane & HP Gas Alert: ஆன்லைன் கேஸ் புக்கிங்கில் நடக்கும் நூதன மோசடிகள்..!