கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் கலவரம் பெரிய அளவில் வெடித்து வருகிறது, இதுவரை நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் இந்த கலவரத்தில் இறந்துள்ளனர்.
அண்மையில் கொடுமையின் உச்சமாக, இரு பெண்களை சாலையில் நிர்வாணப்படுத்தி அவர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்பொழுது இந்தியா முழுவதும் மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காங்கிரஸ் பிரமுகர் சுப்ரியா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார்.
அதில் மணிப்பூர் கலவரம் இன்னும் அடங்காத நேரத்தில் குஷ்பூ ரீல் செய்து கொண்டிருப்பதாகவும், நமது நாட்டின் பிரதமர், முகேஷின் இசையை ரசித்துக் கொண்டிருப்பதாகவும் கடுமையாக சாடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
What a shame Supriya ji. Your desperation makes you fall in your stature. This reel was made on 30th May to wish my guru, who introduced me to Kannada films, on his birthday. And manipur video came to light recently. As always CONgress is behaving like losers trying to sail on… https://t.co/7ptbvIoPhm
— KhushbuSundar (@khushsundar)இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவினை குஷ்பூ வெளியிட்டுள்ளார். அதில் மணிப்பூர் வீடியோ குறித்து எனக்கு முன்பே உங்களுக்கு தெரிந்திருந்தும், நீங்கள் என்ன செய்து விட்டீர்கள்?. வழக்கம் போல் அமைதியாக நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை மட்டும் செய்து செல்லுங்கள் என்று மிக ஆக்ரோஷமாக பதில் அளித்துள்ளார்.
மேலும் அந்த ரீலிஸ் தன்னை கன்னடப் படங்களில் அறிமுகப்படுத்திய, அவருடைய குருவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட ரீலிஸ் என்றும், அது வெளியிடப்பட்டது கடந்த மே 30ம் தேதி என்றும் கூறி தெளிவுபடுத்தியுள்ளார் குஷ்பூ.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருச்சி அருகே மாணவர் சங்கத்தினர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு