யானையுடன் செல்ஃபி எடுக்க ஆசையா? இத பாருங்க! பந்திப்பூரில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

Published : Aug 11, 2025, 10:23 PM IST
elephant attack

சுருக்கம்

பந்திப்பூர் வனச்சரணாலயத்தில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கும் ஆபத்தான போக்கின் விளைவுகளை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனச்சரணாலயத்தில், காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு நபர், யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம், வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கும் ஆபத்தான போக்கின் விளைவுகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது என்ன?

நேற்று மாலை, மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பந்திப்பூர் கெக்கனஹல்லா பகுதியில், ஒரு காட்டு யானை சாலையின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறித்தது. இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் காரில் வந்துள்ளார். அவர் திடீரென காரில் இருந்து இறங்கி, யானையை தனது செல்போனில் படம் பிடித்ததுடன், செல்ஃபி எடுக்க யானையின் அருகில் செல்ல முயன்றார். அதே நேரத்தில், ஒரு கார் யானையைக் கடந்து செல்ல முற்பட்டது.

 

 

இந்த நிகழ்வுகளால் ஆக்ரோஷமடைந்த யானை, முதலில் காரை தனது தும்பிக்கையால் தாக்கியது. பின்னர், செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த அந்த நபரைத் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க, அவர் சாலையோர புதர்களுக்குள் ஓடினார். ஆனால், ஓடும்போது கால் இடறி கீழே விழுந்தார். உடனடியாக யானை அவரை தனது முன்னங்காலால் மிதித்தது. இதில் அவரது தலை சாலையில் மோதி பலத்த காயமடைந்தார். அதன் பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இந்தச் சம்பவத்தை மற்றொரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வனத்துறை எச்சரிக்கை:

பந்திப்பூர் வனச்சரணாலயத்தின் உதவி வனப் பாதுகாவலர் நவீன்குமார் இதுகுறித்து பேசுகையில், "வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால், அவற்றை தொந்தரவு செய்யக் கூடாது, வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். தற்போது செல்போனில் படம் பிடிக்க முயன்ற நபர் யானையால் தாக்கப்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு சென்றிருக்கலாம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்," என்றார்.

வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் மனிதர்களின் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, வனப்பகுதிகளில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?