கேரளாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சர்டிபிகேட்... தூக்கில் தொங்கிய மாணவன்!

By sathish kFirst Published Aug 20, 2018, 5:42 PM IST
Highlights

கேரளாவில் வெள்ளத்தின் போது சான்றிதழ் அடித்து செல்லப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.
 

கடவுளின் சொந்தம் நாடாக கருதப்படும் கேரளா தற்போது தொடர் மழையால் பெருகிய கடும் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பெருமளவிலான சேதத்தை சந்தித்திருக்கிறது. 370க்கும் மேற்பட்ட மக்கள் இந்த இயற்கை சீற்றத்திற்கு பலியாகி இருக்கின்றனர். பலர் கஷ்டப்பட்டு சம்பாதித்த தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் இந்த வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த வெள்ளத்தின் போது கோழிக்கோடு பகுதியை சேர்ந்த கைலாஷ் எனும் 19 வயது மாணவனின் வீட்டினுள் வெள்ளம் புகுந்திருக்கிறது. இதனை அடுத்து மீட்பு குழுவினர் அவரது குடும்பத்தினரை மீட்டு முகாமில் தங்கவைத்திருக்கின்றனர்.
இப்போது வெள்ளம் வடிந்ததை அடுத்து கைலாஷ் தனது வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அங்கு அவரது 12ம் வகுப்பு சான்றிதழை தேடிய அவருக்கு அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவரம் தெரிந்திருக்கிறது. கஷ்டப்பட்டு படித்து வாங்கிய சான்றிதழ் பறிபோனதை அறிந்து விரக்தியின் உச்சத்துக்கே சென்ற கைலாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் . 

வெளியில் சென்றிருந்த கைலாஷின் பெற்றோர் வீடு திரும்பிய போது தங்கள் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்ததை அறிந்து துடி துடித்து போயிருக்கின்றனர்.கூலித்தொழிலாளியான கைலாஷின் அப்பா கைலாஷ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் .கைலாஷின் இந்த நடவடிக்கை யாரும் எதிர்பாராத ஒன்று என்பதால் அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கிய ஒவ்வொரு உயிரையும் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி இருக்கின்றனர் மீட்பு குழுவினரும், கேரள மக்களும் . 

அப்படி இருக்கையில் ஒரு படித்த மாணவன் இப்படி அவசரப்பட்டு உயிரை மாய்த்து கொண்டிருப்பது அனைவருக்கும் வேதனை அளித்திருக்கிறது. இந்த சம்பவத்தில் இன்றைய இளம் தலைமுறையின் அறியாமையை குறை கூறுவதா? மனோதிடமின்மையை சொல்வதா? அல்லது ஒரு சான்றிதழை மீண்டும் பெற்றுவிடலாம் எனும் அடிப்படை உலக அறிவை கூட கற்றுக்கொடுக்காத கல்வி முறையை குற்றம் கூறுவதா? என தெரியவில்லை.

click me!