ஒரே மனைவி.. 2 கணவர்கள்.. விளம்பரத்தில் குழப்பம்..! "குதூகலமா இருந்த குடும்பத்தில் கும்மி அடிச்ச அரசு..!

Published : Aug 20, 2018, 03:07 PM ISTUpdated : Sep 09, 2018, 07:39 PM IST
ஒரே  மனைவி..  2 கணவர்கள்..  விளம்பரத்தில் குழப்பம்..! "குதூகலமா இருந்த குடும்பத்தில் கும்மி அடிச்ச அரசு..!

சுருக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு திட்டங்களும் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, ஒரு சாதாரண கணவன் மனைவியை போட்டோ எடுத்து, அதனை அட்டை பட விளம்பரமாக  பயன்படுத்தி உள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு திட்டங்களும் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, ஒரு சாதாரண கணவன் மனைவியை போட்டோ எடுத்து, அதனை அட்டை பட விளம்பரமாக பயன்படுத்தி உள்ளனர்.

இதில் என்ன ஒரு குளறுபடி என்றால், இரு வேறு விதமாக அந்த கணவன் மனைவி போட்டோவை பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்று தன் கணவருடன் இருக்கும் புகைப்படம். மற்றொன்று வேறு ஒரு ஆணின் புகைப்படத்தை கிராப் செய்து, இந்த பெண்ணின் அருகில் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்து செய்தித்தாளில் விளம்பரம் செய்து உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து மிகவும் அவமானத்திற்கு ஆளான இந்த பெண் ஊடங்களின் உதவியை நாடி உள்ளார். மற்றும் நடந்த அனைத்தையும் கூறி உள்ளார். அதில், "ஒரு நாள் சில புகைப்படக்காரர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தனர்...அப்போது சில லெட்டரில் கையெழுத்து வாங்கினர்...குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தனர். இது ஒரு நல்ல விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படும்" இவ்வாறு அவர் கூறி உள்ளனர். 

பின்னர் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், கந்தி வெங்கலு, ரித்து பீமா என்ற இரண்டு திட்டத்திற்காக அவர்களின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆனால் வேறு ஒருவருடன் கணவர் என குறிப்பிட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், இந்த ஒரு காரணத்திற்காக தங்கள் வீட்டில் கணவன் மனைவி இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டு உள்ளார்.அதுமட்டுமில்லாமல், பேருந்தில் பயணிக்கும் போது அவரவர் தன்னை கிண்டல் செய்து வருவதாகவும் கூறி  உள்ளார் அந்த பெண்மணி. இது குறித்து மக்கள் தொடர்பு மையம் அளித்த விளக்கத்தில், இரண்டு விளம்பரத்தாரர்கள் இந்த விளம்பரத்தை எடுத்து உள்ளனர் என்றும், இதற்கான முறையாக அந்த பெண்ணிடம் ஒப்புதல் வாங்காமல் இந்த செயலில் ஈடுபட்டு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி, வேறு ஒரு ஆணுடன் தன் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை எற்படுத்திய இந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!