அய்யோ தமிழக நீதிபதியா வேண்டவே வேண்டாம்.... அலறும் ஸ்டெர்லைட் ஓனர்!

By vinoth kumarFirst Published Aug 20, 2018, 3:52 PM IST
Highlights

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று காரசார வாதம் நடைபெற்றது. 

முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு 10 நாள் அவகாசம் கோரி இருந்தது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேறு மாநிலத்தை சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டதாக ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்தார். ஸ்டெர்லைட் எவ்வித மாசையும் ஏற்படுத்தவில்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

click me!