சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தது இந்த காரணத்தால்தான்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!

Published : May 05, 2022, 07:23 AM IST
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தது இந்த காரணத்தால்தான்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!

சுருக்கம்

மாணவி தேவநந்தாவின் மரணத்திற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவர் சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவில் இந்த பாக்டீரியா பரவியுள்ளது. பொதுவாக அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு பொருட்களில்தான் இந்த பாக்டீரியா வேகமாக பரவும். ஷவர்மா சாப்பிட்ட மேலும் 3 மாணவிகளுக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியுள்ளது. 

கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு  மாணவி உயிரிழந்த விவகாரத்தில்  அசுத்தமான  தண்ணீர், உணவில் பரவும் ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு

கேரள மாநிலம் காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவநந்தா (16). பிளஸ் 1 மாணவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் அதே ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஆகிய அறிகுறிகள் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிரேத பரிசோதனை

இந்நிலையில், உயிரிழந்த தேவநந்தாவின் உடல் கண்ணூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையில் தேவநந்தாவின் மரணத்திற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாக்டீரியா 

இதுகுறித்து காசர்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர்  கூறுகையில், மாணவி தேவநந்தாவின் மரணத்திற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவர் சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவில் இந்த பாக்டீரியா பரவியுள்ளது. பொதுவாக அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு பொருட்களில்தான் இந்த பாக்டீரியா வேகமாக பரவும். ஷவர்மா சாப்பிட்ட மேலும் 3 மாணவிகளுக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். 

இதையும் படிங்க;- அடிப்பாவி.. உன்னை கொலை செஞ்சிட்டதா புருஷன் ஜெயிலில் இருக்கான்.. சத்தமில்லாமல் காதலனோடு ஜாலியாக இருந்த மனைவி.!

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!