ட்ரோன்கள் மூலம் பொருள்களை டெலிவரி செய்ய சென்னையை சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் என்னும் நிறுவனத்துடன், ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ட்ரோன்கள் மூலம் பொருள்களை டெலிவரி செய்ய சென்னையை சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் என்னும் நிறுவனத்துடன், ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் இனி ட்ரோன்கள் மூலம் பொருட்களை ஸ்விகி நிறுவனம் டெலிவரி செய்ய உள்ளது. இந்தியாவின் பிரபல டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விகி, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் உணவு டெலிவரி செய்து வருகிறது. உணவுகளை ஆர்டர் செய்கின்றனர். வீட்டில் இருந்தபடியே விருப்பப்பட்ட உணவுகளை ஆர்டர் செய்தால் அவர் வீட்டு வாசலுக்கே ஸ்விகி நிறுவனம் மூலம் டெலிவரி செய்யப்படும். இதனிடையே அண்மையில் மிக விரைவாக டெலிவரி செய்யப்படும் என்றும் இந்நிறுவனம் விளம்பரப்படுத்ஹி வருகிறது. இருந்தபோதிலும் சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதால் உணவுகளை குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாமல் போகிறது.
இதனை சரிசெய்ய ஸ்விகி நிறுவனம் புதிய வழியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, ட்ரோன்கள் மூலம் பொருள்களை டெலிவரி செய்யும் முறையை ஸ்விகி நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த முறை ஏற்கனவே சீனா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முதல்முறையாக ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் முறையை ஸ்விகி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட நிலையில், 345 ட்ரோன் நிறுவனங்கள் போட்டியிட்டன.
அவற்றில், தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் 4 நிறுவனங்களை ஸ்விக்கி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. அதில், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமும் தேர்வாகியுள்ளது. இந்த ட்ரோன்களை வைத்து முதற்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூருவிலும் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. 250 மில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடன் இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனமாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் விளங்குகிறது. 2024ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் ட்ரோன்களை தயாரிக்க இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. குர்கான் மற்றும் சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் ட்ரோன் தயாரிப்பு மையத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.