நவ.1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு… முதலமைச்சர் அறிவிப்பு… ஆனா ஒரு ட்விஸ்ட்

By manimegalai a  |  First Published Sep 19, 2021, 6:22 PM IST

கேரளாவில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

கேரளாவை இன்னமும் உலுக்கி கொண்டு தான் இருக்கிறது கொரோனா வைரஸ் எனும் கொடுந்தொற்று. எத்தனையோ கட்டுபாடுகள், வழிமுறைகள், ஆலோசனைகள் என்றாலும் தொற்றுகள் பரவியது. தற்போது தொற்றுகள் குறைந்திருப்பதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொண்டு வருகின்றன.

இந் நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வுகளை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்று முதல் 7ம் வகுப்பு வரையிலும், பின்னர் 10, 12ம் வகுப்புகளும், எஞ்சிய வகுப்புகளுக்கு 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திட்டமிட்ட பள்ளிகள் திறக்கப்பட்டால் அனைத்து தரப்பினரும் என்ன மாதிரியான வழிமுறைகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைளை கல்வித்துறை அதிகாரிகளும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவ வல்லுநர்கள் தொடங்கி உள்ளனர். மேலும் போதிய அளவில் அனைத்து பள்ளிகளும் மாஸ்க்குகளை கைவசம் வைத்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!