கத்தியைக் காட்டி மிரட்டி 100 பேரை காப்பாற்றிய இளைஞர்கள்!! கேரளாவில் ருசிகர சம்பவம்…

By Selvanayagam PFirst Published Aug 25, 2018, 10:35 AM IST
Highlights

கேரளாவில் கடும் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தாலும் வீடுகளை விட்டு வர மறுத்த 100க்கும் மேற்பட்டோரை  இரண்டு இளைஞர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி படகில் ஏற்றி வந்து காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கேரள மாநிலம் முற்றிலும் முடங்கிப் போனது. கிட்டத்தட்ட 14 மாவட்டங்கள்  வெள்ளத்தில் மூழ்கிப்போயின. 10 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருதால் பொது மக்கள் முகாம்களில் இருந்து தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் 8 லட்சம் பேர் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

மழை வெள்ளத்தின்போது ராணுவ வீர்கள், பேரிடர் மீட்புப்படையினர், விமானப்படையினர், மீனவர்கள், இளைஞகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் உயிரை பணயமாக வைத்து வெள்ளத்தில் சிக்கியுள்ள பொது மக்களை காப்பாற்றினர். அப்போது நடந்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக வீடுகளில் காய்கறிகள் நறுக்குவதற்கு கத்தியைப் பயன்படுத்துவார்கள் அது தவிர சமூக விரோதிகளின் கைகளில் கத்தி கிடைத்தால் கொள்ளை அடிப்பது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற கிரிமினல் குற்றங்களுக்கு பயன்டுத்துவார்கள். ஆனால் கேரளாவில் மழை வெள்ளத்தின்போது கத்தியைக் காட்டி மிரட்டி 100 க்கும் மேற்பட்டோரின் உயிரைக்  2 இஞைர்கள் காப்பாற்றி சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் கடந்த  8 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கும் மேலாகப் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்தது. 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கின. 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த கனமழை வெள்ளத்தின்போதும் , மழை தீவிரமாகப் பெய்த போதும் பலரும் தங்களின் சொந்த வீட்டை விட்டு வர மனதில்லாமல் அங்கேயே இருந்தனர், மழை நின்றுவிடும், வெள்ளம் குறையும் என எதிர்பார்த்து, எதிர்பார்த்து வீட்டை விட்டு வெளியேற தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர்.

ஆனால், நாளுக்கு நாள் மழை அதிகரித்து பெய்ததால், வேறுவழியின்றி பலரும் வீட்டைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கினார்கள்.

ஆனால், சொந்தவீட்டை விட்டு வராமல், வீட்டில் அங்கேயே அடைந்து கிடப்பவர்களை எவ்வாறு மீட்பது எனத் தெரியவில்லை. படகில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களிடமும், வீட்டு உரிமையாளர்கள் வர மறுத்து வீட்டிலேயே இருந்துவிட்டனர். இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது.

இதை அறிந்த பத்தினம்திட்டா மாவட்டம் ரன்னி அருகே ஆயத்தலா பகுதியைச் சேர்ந்த பாபு நம்பூதிரி,எம்.கே. கோபகுமாரன் ஆகிய இரு இளைஞர்கள் அவர்களை கத்தி முனையில் மிரட்டி தங்களின் படகில் அழைத்து வந்து மீட்டனர். கிட்டத்தட்ட 100 பேரை அவர்கள் வெள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். அவர்கள் அப்படி மிரட்டி அழைத்து வரவில்லை என்றால் கண்டிப்பாக அந்த நூறு பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள்.

பாபு நம்பூதிரி திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகிறார். இந்த மீட்புப்பணிக்குப்பின், இப்போது பாபு நம்பூதிரியும், கோபகுமாரும், நிவாரண முகாம்களில் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

click me!