கேரளாவில் மீண்டும் கனமழை … 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

Published : Oct 03, 2018, 08:46 PM IST
கேரளாவில் மீண்டும் கனமழை … 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

சுருக்கம்

அரபிக் கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் கேரள மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  குறிப்பாக இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும்  கேரளாவை  கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத மழை வாட்டி வைத்தது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை அண்மையில் கேரளா சந்தித்தது.. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  350 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாநிலத்தில், பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதந்தன.

கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்த மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டும் தற்போது ஏறக்குறைய இயல்பு நிலையை கேரளா எட்டியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடுக்கி, திரிசூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அம்மாவட்டங்களில் ”ரெட் அலர்ட்”  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் அடுத்த டூர்! ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்!
120 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்! ரூ.2,500 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!