ஆங்கிலேயர் ஆட்சியை மனப்வூர்வமாக வரவேற்கிறேன்... காந்தியின் செயலாளர் கல்யாணம்

By manimegalai aFirst Published Oct 3, 2018, 7:42 PM IST
Highlights

மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை, காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில், காந்தி நினைவாக சிறப்பு தபால் தலை கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இதனை மகாத்மா காந்தியின் செயலாளராக இருந்த கல்யாணம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர் காலத்தின்போது, காந்தியை கொலை செய்வதற்கு 6 முறை முயற்சிகள் நடந்தன. அப்போது அவரை ஆங்கிலோயர்கள் காப்பாற்றினர். ஆனால், நாடு விடுதலை பெற்ற ஐந்தரை மாதங்களில் நாம் இழந்து விட்டோம். அப்போது கொடுக்க முடியாத நல்லாட்சியை இன்று வரை நாம் கொடுக்க முடியவில்லை என்றார்.

அந்த ஆங்கிலேய ஆட்சி மறுபடியும் வந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அவர்களை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அவர்கள் ஆட்சியில் லஞ்சம், ஊழலுக்கு ஒருபோதும், இடமில்லை. ஆங்கிலேயர் ஆட்சி நடைமுறை, நிர்வாகத் திறமை குறித்து காந்தியே பலமுறை பாராட்டியிருக்கிறார்.

காந்தியை இப்போது மதிப்பவர்கள், அவர்கள் மட்டுமே. இந்தியாவில் நடைபெற்ற முதல் 2 தேர்தல்களில் காந்தியின் பெயரைச் சொல்லி வாக்குகள் வாங்கினார்கள். இப்போது அவரை மறந்து விட்டார்கள் என்று மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம் கூறினார்.

click me!