பாலியல் வன்கொடுமை புகார்... 70 வயதில் முன்னாள் எம்.எல்.ஏ. கைது... போலீஸ் அதிரடி..!

By Kevin KaarkiFirst Published Jul 2, 2022, 11:13 PM IST
Highlights

அதன்பின் பெயில் பெற்று வெளியில் வந்த பி.சி. ஜார்ஜ் இம்முறை பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகி உள்ளார். 

மூத்த அரசியல்வாதியும், ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான பி.சி. ஜார்ஜ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். 2013 சோலார் பேனல் ஊழலில் குற்றவாளியான பெண் கொடுத்த புகாரின் பேரில் பி.சி. ஜார்ஜ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

இதையும் படியுங்கள்: வெளிநாட்டில் வசிக்கும் உறவினரிடம் இருந்து.. ஆண்டுக்கு 10 லட்சம் வரை பெறலாம் - மத்திய அரசு அறிவிப்பு

70 வயதான பி.சி. ஜார்ஜ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருந்தார். அதன்பின் பெயில் பெற்று வெளியில் வந்த பி.சி. ஜார்ஜ் இம்முறை பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகி உள்ளார். 

இதையும் படியுங்கள்: முகமது ஜுபைருக்கு ஜாமீன் மறுப்பு.. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு !

“சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் நான் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்காததை, அடுத்து அவருக்கு (பினராயி விஜயன்) என் மீது வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர் (பினராயி விஜயன்) தப்பிக்க போவது இல்லை,” என பி.சி. ஜார்ஜ் தெரிவித்தார்.

தற்போது புகார் அளித்து இருக்கும் பெண், கேரளா மாநிலத்தை சேர்ந்த பல அரசியல்வாதிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களை தெரிவித்து இறுக்கிறார். இவற்றின் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. முந்தைய புகார்களில் பி.சி. ஜார்ஜ் பெயர் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: நுபுர் சர்மா ஆதரவாளர்கள் கொலை வழக்கு - தீவிரம் காட்டும் அமித்ஷா!

கடந்த மாதம் கேரளா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜலீல், பி.சி. ஜார்ஜ் மீது குற்றம்சாட்டி இருந்தார். அதில் தங்க கடத்தல் விவகாரத்தில் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுக்கும் பி.சி. ஜார்ஜூக்கும் தொடர்பு உண்டு என தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறையினர் பி.சி. ஜார்ஜூக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, இந்த பெண் பி.சி. ஜார்ஜ் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருக்கிறார்.

அந்த புகாரில், கடந்த பிப்வரி 10 ஆம் தேதி தங்க கடத்தல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி தைக்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு தன்னை அழைத்து, அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார் என தெரிவித்து இருக்கிறார். இதை அடுத்து திருவணந்தபுரம் போலீசார் ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் 354, 354 ஏ (பாலியல் வன்கொடுமை செய்தது) உள்ளிட்டவைகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

click me!