
முதல் பரிசு வென்றவருக்கு ரூ.25 கோடி வழங்கப்படும். இரண்டாம் பரிசு 20 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும். மூன்றாம் பரிசு 20 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
கேரள மாநில லாட்டரித் துறையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருவோணம் பம்பர் BR 105 லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசு TH 577825 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் மதியம் 1 மணிக்கு இந்த டிரா நடைபெற்றது. முதல் பரிசு வென்றவருக்கு ரூ.25 கோடியும், இரண்டாம் பரிசு பெற்ற 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும் பரிசாக வழங்கப்படும். மூன்றாவது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
இந்த முறை பம்பருக்கு 75 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. சேதமடைந்த ஒரு டிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கேரளாவைப் போன்று தமிழகத்திலும் இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு மவுசு அதிகம் உள்ள நிலையில். கடந்த ஆண்டு இந்த பரிசுத் தொகை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் வென்றிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஓணம் பம்பர் BR 105 வென்ற டிக்கெட் எண்கள்
முதல் பரிசு - ரூ. 25 கோடி
TH 577825
இரண்டாம் பரிசு - ரூ. 1 கோடி
TK 459300, TD 786709, TC 736078, TL 214600, TC 760274, TL 669675, TG 176733, TG 307775, TD 779299, TB 659893, TH 464700, TH 784272, TE 714250, TB 221372, TL 160572, TL 701213, TL 600657, TG 801966, TG 733332, TJ 385619
ஆறுதல் பரிசு - ரூ. 5 லட்சம்
TA 577825, TB 577825, TC 577825, TD 577825, TE 577825, TG 577825, TJ 577825, TK 577825, TL 577825