
இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிராக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக கேரள சட்டசபை இன்று கூடுகிறது.
இக்கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது. இதற்க நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், கேரள மாநிலம் இதை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், முதலில் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்தார். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும் இந்த சட்டத்தை கேரளாவில் அமல் படுத்த முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிராக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக கேரள சட்டசபை இன்று கூடியுள்ளது.
இதில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கும் வகையில் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசி வருகிறார்.