மாநிலம் முழுவதும் இலவச WiFi - கேரள அரசு அதிரடி

First Published Mar 18, 2017, 3:00 PM IST
Highlights
kerala govt provide free wifi all over state


கேரள மாநிலத்தில் உணவு, தண்ணீர் மற்றும் கல்வி போன்ற அடிப்படை தேவைகளின்  பட்டியலில் இண்டர்நெட் இணைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. கேரள பட்ஜெட்டில் மாநிலம் முழுக்க பெரும்பாலானோருக்கு இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அறிவித்திருந்தார். 

கேரள மாநிலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும்  இண்டர்நெட் இணைப்பு வழங்கும் நோக்கில் மின்சார வயர் பதிக்கும் போதே அருகில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் புதைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கே - ஃபான் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் பிராட்பேண்ட் வழங்கவும், பொது இடங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

1000  கோடி ரூபாய்  பட்ஜெட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டமானது 18 மாதங்களில் முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கே போன் நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் இண்டர்நெட் வழங்கும் திட்டம் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை ஊக்குவிக்கும் ஒன்றாக அமையும் எனவும் அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.  

கேரள மாநில பஙடஜெட்டில்   20 லட்சம் பேருக்கு இலவச இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என அறிவிப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த புதிய திட்டத்தின் மூலம் இண்டர்நெட் இணைப்பினை அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.

click me!