
இயற்கைச் சூழலுக்கு கேடுவிளைவிக்காத வகையில் பொருட்களை பயன்படுத்தி, மாநிலத்தில் இனிமேல், திருமணங்களை நடத்தப் பட வேண்டும் என்று கேரள மாநிலம் முடிவு செய்துள்ளது.
பிளாஸ்டிக்குக்கு தடை
திருமணங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், பூமியில் மக்காத பொருட்கள்,தெர்மாகூல் உள்ளிட்ட இயற்கைக்கு குந்தகம் விளைக்கும் பொருட்களை திருமணங்களில் பயன்படுத்தாமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக திருமணங்களில் உலோக டம்ளர்கள், தட்டுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த உலோகங்களை பயன்படுத்த மக்களுக்கு அறிவுரை கூற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ‘கிரீன் புரோட்டாகால்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின், திருமணங்கள் நடக்கும் அரங்குகள், சமூகதாயக் கூடங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். இயற்கைச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சோதனை முயற்சி
கேரள அரசன் சுகாதாரத்துறையான ‘சுச்விதா இயக்கம்’ ஏற்கனவே கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம் மற்றும் ஆழப்புழா ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
படிப்படியாக குறையும்
இது குறித்து சுச்விதா இயக்கத்தின் இயக்குநர் சி.வி. ஜாய் கூறுகையில், “ மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கையில் ஒருபகுதி ‘கிரீன் ப்ரோட்டோக்கால்’ ஆகும்.
இதன் நோக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைத்துக்கொள்வதாகும். மாநிலத்தில் நடக்கும் திருமணங்களில் பயன்படுத்தப்படும் தட்டுகள், தண்ணீர் குடிக்கும் டம்ளர்கள் என பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்தி வருகிறோம். இந்த ‘க்ரீன்ப்ரோட்டோக்கால்’ திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்போது, நீண்ட காலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு படிப்படியாக குறையும்.
ஒத்துழைப்பு
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்ைட தீவிரமாக குறைத்தால், நமது இலக்கான பிளாஸ்டிக் இல்லாத சமூகத்தை அடையமுடியும். இந்த திட்டத்தை மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து நிர்வாகம், சமூக கலாச்சார மற்றும் மதரீதியான குழுக்களோடு இணைந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். மேலும், திருமண மண்டபங்கள், அரங்குகள், சமூகக் கூடங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளோம்.
வீடியோ பதிவு
இந்ததிட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த சிறப்பு பறக்கும் படைகள், சுச்விதாஇயக்கத்தை சேர்ந்த அதிகாரிகள், வருவாய் துறையினர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த குழுவினர் திருமண அரங்குகள், மண்டபங்களில் திருமணம் நடக்கும் போது ஆய்வு செய்து, வீடியோ பதிவு செய்துகொள்வார்கள். இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் பொருட்கள் திருமணத்தில் பயன்படுத்தப்பட்டால் அந்த திருமண வீட்டார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பசுமை சான்றிதழ்
இந்த திட்டம் கண்ணூர், எர்ணாகுளம் மாவட்டத்தில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு, இயற்கைக்கு சூழலுக்கு கேடுவிளைவிக்காமல் திருமணம் நடத்தியவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது’’ ன்றார்.