
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு நேற்று முன்தினம் 45வது பிறந்தது. ஆனால், அவர் தனது பிறந்தநாளை தொண்டர்கள் கொண்டாட முற்பட்டபோது, பிறந்தநாளைக் கொண்டாடாதீர்கள், பதிலாக 10 மரக்கன்றுகளை நடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
மேலும், மாநிலத்தில் பயிர் கடன் தள்ளுபடி பெற்ற 86 லட்சம் விவசாயிகள், ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தலா 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு அரசிடம் அனுமதிபெறும் முன்பு, அவர்கள் நிலத்தில் குறைந்தபட்சம் 10 மரக்கன்றுகளை நட்டுபராமரிக்க வேண்டும். மேலும், விவசாயிகள் நீர்பாசனத்தில் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, நீரைச் சேமிக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பராமரிக்க, பாதுகாக்க இந்தியா வேறு எந்த நாட்டில் இருந்து தொழில்நுட்பங்களை பெறத் தேவையில்லை, நமது பாரம்பரிய முறைகளே போதுமானது.
எனது பிறந்தநாளை தொண்டர்கள் கொண்டாடுவதற்கு பதிலாக, 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் ’’ எனத் தெரிவித்தார்.
மேலும், யோகி ஆதித்யநாத் பிறந்தநாளுக்கு பிரதமர்மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், முதல்வர் சந்திரபாபு நாயுடு, வசுந்தரா ராஜே, ஆளுநர் ராம்நாயக் உள்ளிட்ட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.