
பலவித கார் விபத்துகள் குறித்து கேள்விபட்டிருப்போம், பத்திரிகைகளில் படித்திருப்போம், நேரில் கண்டிருப்போம். ஆனால் ஓடும் காரில் குதிரை முன்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த வினோதமான விபத்து ஜெய்பூரில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஹசன்பூர் என்ற இடத்தில் குதிரை ஒன்று ஓடும் காரில் வந்து மோதியதில் வண்டி ஓட்டுனருக்கும் குதிரைக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கட்டுக்கடங்காமல் ஓடிய குதிரை முதலில் ஒரு இரு சக்கர வாகன ஓட்டுனர் மீது மோதியது பிறகு பதட்டத்தில் விலகி ஓடிய குதிரை அந்த வழியாக வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கடுமையான வெய்யில் தாங்க முடியாமல் குதிரை தறிகெட்டு ஓடியதாகவும், மேலும் அந்த குதிரைக்கு கண் பார்வை கோளாறு இருப்பதாகவும் குதிரையை பரிசோதித்த டாக்டர் அரவிந்த் மாதுர் தெரிவித்தார்.