ரோட்ல நின்று போராடினாலும் அது பயங்கரவாதம்தான்: கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

By Asianet TamilFirst Published Feb 22, 2020, 6:14 PM IST
Highlights

ரோட்ல நின்று போராடினாலும் அது பயங்கரவாதம்தான்: கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

சாலயைில் நின்று போராட்டம் செய்து, மக்களுக்கு இடையூறு விளைவித்து, தங்கள் கருத்தை பிறா் மீது திணிக்க முயன்றாலும் அது தீவிரவாதம்தான் என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் விமர்சித்துள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் அதை விமர்சித்து கேரள ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்

டெல்லியில் நடந்த  ‘இந்திய மாணவா் நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பேசியதாவது:

ஜனநாயகத்தின் அடிப்படையில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதில் எந்தவிதப் பிரச்னையுமில்லை. ஆனால், குறிப்பிட்ட விவகாரத்தில் நாங்கள் விரும்பும் வகையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்  என்ற கோரிக்கையுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது முறையானது அல்ல. இது பயங்கரவாதத்தின் மற்றொரு வடிவமே ஆகும்.

தேவையில்லாமல் மக்களைக் குழப்ப வேண்டாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உங்களுடைய கருத்துகளை மற்றவா்கள் மீது திணிக்க முற்பட வேண்டாம்.

வீட்டில் யாரும் வசிக்காமல் காலியாக இருந்தால், அங்கு தீய சக்திகள் குடியேறும். அதேபோல ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் நுழைந்துவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். இவ்வாறு முகமது கான் தெரிவித்தார்

click me!