பள்ளி,கல்லூரகளில் போராட்டம் நடத்த தடை: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

By Kanimozhi PannerselvamFirst Published Feb 27, 2020, 7:37 PM IST
Highlights

ஏற்கெனவே ஒரு வழக்கில் மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு தர்ணா, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் ஆகியவற்றைப் பள்ளி கல்லூரிகளில் நடத்துவதை உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கல்லூரிகள், பள்ளிக்கூட நிர்வாகங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் , பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் போராட்டத்தால் அமைதியான சூழல்கெட்டு, மற்ற மாணவர்கள் படிப்பும் பாதிப்படைகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. சுரேஷ் குமார் தலைமையிலான ஒரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. மனுவை விசாரித்து நீதிபதி சுரேஷ் நேற்றுப் பிறப்பித்த உத்தரவில், "மாநிலத்தில் எந்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளிலும் மாணவர் அமைப்பு தர்ணா, போராட்டம், உள்ளிருப்பு, அமர்ந்து போராட்டம் செய்தல், கெரோ என எந்த வகையான போராட்டங்களையும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள் என்பவை அமைதியான முறையில் ஆலோசனை நடத்தும் இடம், கல்வி கற்கும் இடமாகும். போராட்டம் நடத்தும் இடமல்ல. இந்தத் தடை உத்தரவு மற்றவர்களுக்கும் பொருந்தாது" என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார். ஏற்கெனவே ஒரு வழக்கில் மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு தர்ணா, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் ஆகியவற்றைப் பள்ளி கல்லூரிகளில் நடத்துவதை உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. குறிப்பிடத்தக்கது.

tags
click me!