
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த டாக்டர் ஷஹானாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். பெண்ணின் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
உள்ளூர் ஊடகங்கள் அளித்த அறிக்கைகளின்படி, தற்கொலை செய்துகொண்ட டாக்டர் ஷஹானா தனது தாய் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிந்து வந்த அவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த சூழலில் தான் ஷஹானாவிற்கு, தன்னுடன் பணிபுரிந்து வந்த டாக்டர் ரூவைஸ் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு 6 நாட்கள் குளிர்கால விடுமுறை.. எப்போது முதல் தெரியுமா?
இரு வீட்டாரும் இணைந்து பேசிய நிலையில் டாக்டர் ரூவைஸ் குடும்பத்தினர் வரதட்சணையாக 150 சவரன் தங்கம், 15 ஏக்கர் நிலம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் கேட்டதாக டாக்டர் ஷஹானாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்ட வரதட்ஷனையை, ஷஹானாவின் குடும்பத்தினரால் கொடுக்க இயவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த காதலரின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த அந்த இளம் மருத்துவர், தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரது அபார்ட்மெண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், "அனைவருக்கும் பணம் மட்டுமே தேவை" என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
வரதட்சணைக் கோரிக்கை குறித்த புகார்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
மாநில சிறுபான்மை ஆணையமும் இது குறித்து விசாரித்து வருகிறது. மாவட்ட ஆட்சியர், நகரக் காவல் ஆணையர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் ஆணையத்தில் டிசம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுத் தலைவர் ஏ.ஏ.ரஷீத் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெலுங்கானா முதல்வராக இன்று பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி.. சோனியா காந்தி குடும்பத்தினர் பங்கேற்பு..
அதிகம் படித்த மக்கள் இடையேயும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வேதை அளிப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் எந்த விஷயத்திற்கும், கவலைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.