கேரள காங்கிரஸ் எம்.பி. ஷானவாஸ் காலமானார்...!

Published : Nov 21, 2018, 11:14 AM ISTUpdated : Nov 21, 2018, 11:19 AM IST
கேரள காங்கிரஸ் எம்.பி. ஷானவாஸ் காலமானார்...!

சுருக்கம்

கேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான எம்.ஐ.ஷானவாஸ் (67) உடல்நலக்குறைவால் காலமானார்.

கேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான எம்.ஐ.ஷானவாஸ் (67) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த வாரம் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு மருத்துவக் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஷானவாஸ் உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிற்பகல் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஷானவாஸ் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். 

எம்பி ஷானவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!