Bishop franco case : கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு..கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் விடுதலை..

By Raghupati RFirst Published Jan 14, 2022, 12:50 PM IST
Highlights

சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்றான கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்த கேரள பிஷப் பிராங்கோ  முல்லக்கல்லின் வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி கற்பழித்து விட்டதாக கடந்த 2018ம் ஆண்டில் புகார் கூறினார். இந்த புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக வந்த மற்ற பல கன்னியாஸ்திரிகள் பிஷப் பிராங்கோ மூலக்கலைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் அமர்ந்தனர்.

2014 மற்றும் 2016 க்கு இடையில் முல்லக்கல் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் எஸ்பியிடம் 2018 ஜூன் மாதம் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட பிஷப் செப்டம்பர் 21 அன்று கைது செய்யப்பட்டார். ஐந்து கன்னியாஸ்திரிகள் பகிரங்கமாக அவரைக் கைது செய்யக் கோரி எர்ணாகுலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

பிராங்கோ மூலக்கல் மீது பலாத்காரம் உள்ளிட்ட 7 ஐபிசி பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு 39 சாட்சிகளை விசாரித்தது. காவல்துறையில் புகார் அளிப்பதற்கு முந்தைய காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண் பல உள் புகார்களைக் கொடுத்ததாகவும், ஆனால் அவருக்கு எந்தெ பதிலும் கிடைக்கவில்லை என்றும் அரசுத் தரப்பு கூறியது. அவர் குற்றம் சாட்டியபோது அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். எனினும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாக கூறி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் பாதிரியார் முல்லக்கலை விடுவித்து உத்தரவிட்டிருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!