மழை பெய்யும் போது பரிட்சை எதுக்கு…? பிளஸ் 1 தேர்வு தள்ளி வைப்பு

By manimegalai aFirst Published Oct 18, 2021, 8:50 AM IST
Highlights

கேரளாவில் பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்: கேரளாவில் பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் கனமழை பின்னி எடுத்து வருகிறது. கடந்த பலநாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக, கோட்டயம், பத்தினம்திட்டா, இடுக்கி என மழையால் பல பகுதிகள் சிக்கி தவிக்கின்றன.

கனமழை, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஐ எட்டி இருக்கிறது. இடைவிடாத மழையால் மாநிலம் முழுவதும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மீட்பு பணிகளில் ராணுவம் களம் இறங்கி உள்ளது.

இந் நிலை மழை விடாது நீடிப்பதால் பிளஸ் 1 தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவன்குட்டி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

மாநிலத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. ஆகையால் பிளஸ் 1 தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. எப்போது மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்பது அறிவிக்கப்படும். பள்ளித்தேர்வு போல பல்கலைக்கழகங்களிலும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன என்று அறிவித்துள்ளார்.

click me!