டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்: கவிதா மீண்டும் 16ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

Published : Mar 11, 2023, 09:35 PM ISTUpdated : Mar 11, 2023, 09:47 PM IST
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்: கவிதா மீண்டும் 16ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சுருக்கம்

தெலுங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினர் கவிதா மார்ச் 16ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இன்று ஆஜரான தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா, மீண்டும் மார்ச் 16ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.

முன்னதாக, இன்று டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜரானர். அவரிடம் நடைபெற்ற விசாரணை 9 மணிநேரம் நீடித்தது. அதன் மீது தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. சில மாதங்களில் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது தந்தையும் ராஷ்டிர சமிதி முதல்வருமான சந்திரசேகர ராவை மிரட்ட முயற்சிப்பதாக கவிதா குற்றம் சாட்டுகிறார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்வரும் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

லூலு குடும்பத்தின் ரூ.600 கோடி ஊழல்! ஆவணங்களைக் கைப்பற்றியது அமலாக்கத்துறை!

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு மார்ச் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கவிதா, விசாரணையை தன் வீட்டிலேயே வைத்து நடத்துமாறு கோரினார். பெண்களிடம் விசாரிப்பதாக இருந்தால் அவர்களை வரவழைக்காமல் வீட்டிலேயே விசாரணை நடத்த சட்டத்தில் இடம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை டெல்லியில் உள்ள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியது. அதற்கு ஒப்புக்கொண்ட கவிதை, மார்ச் 16ஆம் தேதி நேரில் ஆஜராவதாகக் கூறினார். ஆனால் மீண்டும் கவிதாவின் கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் மார்ச் 11ஆம் தேதி ஆஜராவதாகக் கவிதா கூறினார். அதன்படி இன்று அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல் சூளை குழிகளை மூட 3 மாத அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!