எங்க வாழ்க்கையைக் காப்பாற்றிய மோடி! காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபட்டவர் உருக்கமான பேச்சு!

By SG Balan  |  First Published Mar 7, 2024, 10:05 PM IST

வியாழக்கிழமை ஸ்ரீநகரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொட்டு சுதந்திரமாக சுவாசித்து வருகிறது என்று தெரிவித்தார்.


ஜம்மு-காஷ்மீர் 2019ஆம் ஆண்டில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. வியாழன் அன்று பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றது, அப்பகுதியின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி இருக்கிறது. காஷ்மீர் பகுதியில் கல்வீச்சில் ஈடுபட்டுவந்த அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தினை  அந்த வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாணவராக இருந்தபோது கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், தனது வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருந்ததாகவும் கூறுகிறார்.

Tap to resize

Latest Videos

அப்போது அவரும் அவரைப் போன்ற பலரும் கல்வீச்சு போன்ற வன்முறையில் இருந்து விலகி மாற்று வழியில் வாழ்க்கையை நடத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024: காங்கிரஸ் கட்சி வெளியிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள்!

Every Indian must listen to this Ex Stone pelter from J&K pic.twitter.com/Uw0x7ZAvts

— Frontalforce 🇮🇳 (@FrontalForce)

"நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது கல்வீச்சில் ஈடுபட்டேன். எங்களுக்கு வேலை இல்லை. கல்லெறிவதற்கு 500 ரூபாய் கொடுத்தார்கள்" என்று அவர் நினைவூகூர்ந்திருக்கிறார்.  "நாங்கள் பதிலுக்கு தாக்கப்படுவோம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தோட்டா அல்லது வேறு எதையும் வைத்து கல்லெறிந்தவர்களைச் சீர்திருத்த முடியவில்லை" என்கிறார்.

"அப்போது நான் என் வாக்குரிமையைக்கூட பயன்படுத்தாமல் இருந்தேன். பிறகு நான் மோடி ஜியை வெற்றிபெறச் செய்ய வாக்குளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டேன். அதனால் நான் காப்பாற்றப்பட்டேன். எங்களைப் போன்ற கல் வீச்சுக்காரர்கள் பலர், ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்" என்று ட்விட்டரில் பரவும் வீடியோவில் உள்ள நபர் கூறுகிறார்.

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி:

பிரதமர் மோடி வியாழக்கிழமை தனது ஶ்ரீநகர் பயணத்தின் போது, ​​ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் கொண்டாடினார். ஜம்மு காஷ்மீர் இப்போது அதன் கட்டுகளை உடைத்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறது என்றும் தெரிவித்தார்.

பிராந்தியத்தின் விவசாயப் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில், பிரதமர் மோடி கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். "ஸ்வதேஷ் தர்ஷன்" மற்றும் "பிரஷாத்" திட்டங்களின் கீழ் சுற்றுலாத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

"இன்று அர்ப்பணிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியை அதிகரிக்கும். வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 1,000 அரசாங்க ஊழியர்களுக்கு பிரதமர் நியமனக் கடிதங்களை வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு மத்திய திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியம் நீட்டிப்பு! ஒரு சிலிண்டர் ரூ.603 க்குக் கிடைக்கும்!

click me!