வெண் போர்வை போர்த்தியது போல் காஷ்மீரில் பனிப்பொழிவு தொடக்கம்…கொண்டாட்டத்தில் சுற்றுலாப் பயணிகள்…

First Published Jan 5, 2017, 6:36 AM IST
Highlights


வெண் போர்வை போர்த்தியது போல் காஷ்மீரில் பனிப்பொழிவு தொடக்கம்…கொண்டாட்டத்தில் சுற்றுலாப் பயணிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்மார்க், ரஜோரி போன்ற பகுதிகளில் ஐரோப்பிய நாடுகளை நினைவுபடுத்தும் வகையில், இதமான பனிப்பொழிவு தொடர்ந்து நிலவிவருகிறது.

எங்கு பார்த்தாலும் உறைபனி சூழ்ந்து காணப்படுவதால், இதனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம்கூட்டமாக வருகை தருகின்றனர். 

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என போற்றப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் பனிப்பொழிவு சீசன் தொடங்கியது.

தட்பவெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவாக இருப்பதால், குல்மார்க், ரஜோரி போன்ற பகுதிகள் எப்போதும் பனி சூழ்ந்து வெண்மையாக காட்சியளிக்கின்றன.

குறிப்பாக இயற்கை எழில்கொஞ்சும் குல்மார்க் பகுதியில், வீடுகள், மரங்கள், சாலையோர தடுப்புகள் என எங்குநோக்கிலும் நுரை பொங்க உறைபனி சூழ்ந்திருக்கும் காட்சியை காணமுடிகிறது.

இதனை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்து மகிழ்கின்றனர்.

இதேபோல், எல்லைப்பகுதியில் உள்ள ரஜோரியும் பனிப்பொழிவின் தாக்கத்தில் இருந்து தப்பவில்லை.

அங்கு நிலவும் கடும் குளிரை சமாளிப்பதற்காக உள்ளூர் பகுதி மக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்வதை காணமுடிகிறது.

ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளை இணைக்கும் சோஃபியான் என்ற இடத்தில் ஏற்பட்ட அதிக பனிப்பொழிவு காரணமாக, நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதேபோல் காஷ்மீரின் மற்ற பகுதிகளிலும் பனிப்பொழிவு சீசன் நிலவி வருகிறது.

click me!