காஷ்மீரில் எல்லையோர கிராமங்களை குறி வைத்த பாகிஸ்தான் - ராணுவ அதிகாரி உள்பட 8 பேர் படுகாயம்

 
Published : Oct 27, 2016, 10:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
காஷ்மீரில் எல்லையோர கிராமங்களை குறி வைத்த பாகிஸ்தான் - ராணுவ அதிகாரி உள்பட 8 பேர் படுகாயம்

சுருக்கம்

காஷ்மீரில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் ராணுவ உதவியுடன், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 18ம் தேதி தாக்குதல் நடத்தியதில், 19 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இதையடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 40க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து காஷ்மீரில் எல்லையோர பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், கிராமங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி ஆர்.எஸ். புரா மற்றும் ஆர்னியா செக்டார் பகுதிகளில் இந்திய நிலைகள் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். நமது ராணுவ வீரர்களும், அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

ஆனாலும், சாய் கலான் என்ற பகுதியில் எல்லை பாதுகாப்பு படையின் உதவி எஸ்ஐ ஏ.கே. உபாத்யாயா படுகாயம் அடைந்தார். இதேபோல் ஆர்னியா பகுதி எல்லையோர கிராமங்களில் உள்ள வீடுகளை மட்டும் குறி வைத்து நேற்று அதிகாலை 1.30 மணி முதல் தானியங்கி ரக ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் பாகிஸ்தான் வேண்டுமென்றே தீவிர தாக்குதல் நடத்தியது. விடிய விடிய இந்த தாக்குதல் நீடித்தது. இதற்கு இந்திய வீரர்களும் அதே ரக ஆயுதங்கள் மூலம் தக்க பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் ஏராளமான குண்டுகள் வீடுகளின் மீது விழுந்து வெடித்துச் சிதறின. அப்போது வீடுகளுக்குள் இருந்த கிராமவாசிகள் மீதும் குண்டுகள் பாய்ந்தன. இதில் சிறுமிகள், பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். 

துப்பாக்கி சண்டை நடந்த நேரத்தில், வீட்டின் தொழுவங்களில் கட்டப்பட்டு இருந்த பல கால்நடைகள் பரிதாபமாக இறந்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஜம்மு நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆர்னியா, ஆர்.எஸ்.புரா எல்லையோர கிராமங்களில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
Rahul Gandhi with Messi: மெஸ்ஸியுடன் கூலாக உரையாடிய ராகுல் காந்தி.. ரசிகர்கள் ஆரவாரம்..