காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சுரங்கப்பாதை...

Asianet News Tamil  
Published : Sep 30, 2017, 09:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சுரங்கப்பாதை...

சுருக்கம்

Kashmir border from Pakistan to tunnel to India


ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வருவதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கண்டு பிடித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக அந்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அர்னியா செக்டர் வழியே செல்லும் சர்வதேச எல்லையில் நேற்று துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுரங்கப்பாதை ஒன்றினை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச எல்லையில் விக்ரம் மற்றும் படேல் ராணுவ நிலைகளுக்கு மத்தியில் சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்தோம். இது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வருமாறு போடப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பணிகள் நிறைவு பெறவில்லை. 14 அடி நீளம் கொண்டதாக இந்த பாதை உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதன் பின்னர், எல்லையில் சுரங்கப்பாதை ஏதேனும் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம் என்றனர்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது.. இபிஎஸ் ஆவேசம்..!
பாகிஸ்தான் முகத்தில் கரி..! ராணுவம் இனி கொக்கரிக்கவே முடியாது..! ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி..!