கர்நாடகாவில் 4% முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து; மறுஉத்தரவு வரும் வரை...உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!!

By Dhanalakshmi G  |  First Published May 9, 2023, 1:07 PM IST

கர்நாடகா மாநிலத்தில் முஸ்லிம்களின் நான்கு சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தல் களத்தில் முக்கிய கட்சிகளாக பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் உள்ளன. இந்த முறை பிரதமர் மோடி அதிகளவில் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து இருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூனே கார்கே, சோனியா காந்தி ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. வரும் மே 13 ஆம் தேதி தேர்தல் அறிவிப்புகள் வெளியாகிறது. 

தேர்தல் அறிவிப்புக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத இடஒதுக்கீட்டை மாநில பாஜக அரசு ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீட்டை லிங்காயத் மற்றும் ஒக்கலிக்கர் சமுதாயத்தினருக்கு வழங்கியது. இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மத ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்த இட ஒத்துக்கீடு ரத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்து வைத்தது.

Tap to resize

Latest Videos

குஜராத்தில் காணாமல் போன் 41,621 பெண்கள் குறித்து காவல்துறை விளக்கம்

இந்த நிலையில் இன்று இன்று உச்சநீதிமன்றம் தனது கருத்தில், நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும்போது, அதன் புனிதத்தை பரமாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை கர்நாடகாவில் 4 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்பதற்கான இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று நீட்டித்தது. பின்னர் இந்த வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தது. 

சிறுவனின் காயத்திற்கு ஃபெவிகுவிக் போட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்.. அதிர்ந்து போன பெற்றோர்..

நீதிமன்ற விஷயங்களில் பகிரங்க அறிக்கைகளை வெளியிடக்கூடாது, அரசியலுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. மே 10-ம் தேதி கர்நாடகா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தில் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை குறித்து மனுதாரர்கள் புகார் தெரிவித்தனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை தனது கட்சி திரும்பப் பெற்றதாக அமித் ஷா பெருமையுடன் தெரிவித்து இருந்தார் என்று குறிப்பிட்டார். 

நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு இருக்கும்போது இதன் மீது கருத்துக்களை ஏன் பொதுவெளியில் ஒருவர் கூற வேண்டும் என்று நீதிபதி பிவி நாகரத்னா கேட்டு இருந்தார். அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''கொள்கை அளவில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அது முற்றிலும் சரியானது'' என்றார். இதற்கு பதில் அளித்த நீதிமன்றம், ''நீதிமன்றத்தின் உத்தரவு பராமரிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தது.

click me!