இனி இந்த மாநிலத்தில் சுவாச நோய், காய்ச்சல் நோயாளிகளுக்கு கோவிட் சோதனை கட்டாயம்..

By Ramya sFirst Published Jan 6, 2024, 8:38 AM IST
Highlights

கர்நாடகாவில் சுவாச நோய்கள், காய்ச்சல் போன்ற நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு COVID-19 சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜே.என்.1 மாறுபாடு காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநிஅல் அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இணை நோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் சுவாச நோய்கள், காய்ச்சல் போன்ற நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு COVID-19 சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இதுகுறித்து பேசிய போது "ஒவ்வொரு நாளும் 7,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன, மேலும் கோவிட் பாசிட்டிவிட்டி விகிதம் 3.82 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் நேர்மறை விகிதம் இன்னும் குறையவில்லை," என்று அமைச்சர் கூறினார்.

Latest Videos

‘ரத்தம் விற்பனைக்கு இல்லை’: இதை தவிர அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு அதிரடி முடிவு..

தொடர்ந்து பேசிய அவர் “ அண்டை மாநிலமான கேரளாவில் கோவிட் வழக்குகள் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.  கோவிட் பாசிட்டிவ் உள்ளவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் தொற்று அல்லது கடுமையான சுவாச நோய் உள்ளவர்களூக்கு கோவிட் பரிசோதனையை கட்டாயமாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். முன்னதாக, இந்த பாதிப்புகளில் 20-ல் ஒருவருக்கு மட்டுமே கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் இனிமேல் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் அனைத்து இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாச நோயாளிகளுக்கும் பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் JN.1 மாறுபாடு: இவை தான் புதிய அறிகுறிகள்.. மருத்துவர்கள் முக்கிய தகவல்..

மேலும் பேசிய அவர் "அறிகுறிகள் உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறார்கள். வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அடுத்த வாரம் கோவிட் பாதிப்பு குறையும் போக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நேற்று (வியாழக்கிழமை) கூடியது. இந்த குழு மேலும் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அவற்றை (வழிகாட்டிகளை) ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

click me!