ராஜஸ்தானின் கோட்டாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.. பயணிகளின் நிலை என்ன?

By Ramya s  |  First Published Jan 6, 2024, 7:28 AM IST

ராஜஸ்தானின் கோட்டாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்ட விபத்து ஏற்பட்டது. எனினும் நல்வாய்ப்பாக இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.


கடந்த ஆண்டில், பல ரயில் விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ரயில் தடம் புரண்ட விபத்துகள்.  கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோரில் உள்ள பஹானா பஜார் நிலையம் அருகே தடம் புரண்டு, பின்னர் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 900 பேர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. இதை தொடர்ந்து பல இடங்களில் ரயில் தடம் புரண்ட விபத்துகள் பதிவாகின. எனினும் அதில் பெரிய அளவில் சேதங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

2024 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், துரதிருஷ்டவசமாக மற்றொரு ரயில் தடம் புரண்டது, ராஜஸ்தானின் கோட்டாவில் போபால் நோக்கிச் செல்லும் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் நேற்று மாலை தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tap to resize

Latest Videos

ராக்கெட் மூலம் விண்வெளியில் மின்சாரம் மற்றும் நீர் தயாரிப்பு - PSLV C58 மூலம் சாதித்துக்காட்டிய ISRO!

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் பேசிய போது “ ரயிலின் எண் 14813, ஜோத்பூர்-போபால் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் கோட்டா சந்திப்பு பகுதியில் தடம் புரண்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை தொடங்கினர்.” என்று தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கோட்டா கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் பயணிகளுக்கான அவசர உதவி எண்களையும் வெளியிட்டார்.

அவசரகால தொடர்பு எண்கள் 

0744-2467171
0744-2467172
9001017097
9414018692
9887143093

இந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோட்டா சந்திப்பு அருகே போபால் செல்லும் பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.

இந்திய பணியாளர்களுடன் கடத்தப்பட்ட கப்பல்.. அனைவரையும் அதிரடியாக மீட்ட கடற்படை கமாண்டோக்கள் - முழு விவரம்!

முன்னதாக டிசம்பர் 2023 இல், ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் காலி ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பிகானேரின் லால்கர் ரயில் நிலையத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!