PSLV C-58 ISRO New Achievement : இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த ஜனவரி 1ம் தேதி விண்ணில் ஏவிய PSLV C58ல் புதிய சோதனை ஒன்றை நடத்தி வெற்றிகண்டுள்ளனர்.
சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி, இந்திய விஞ்ஞானிகளின் புகழை மீண்டும் ஒருமுறை உலகறிய செய்தது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதலத்தில் இருந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணுக்கு பி.எஸ்.எல்.வி சி-58 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவி புதிய சாதனையை படைத்தனர்.
இந்நிலையில் விண்வெளியிலேயே மின்சாரமும், நீரும் தயாரித்து மீண்டும் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளது இஸ்ரோ. இந்த தகவல் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமைகொள்ளும் வண்ணம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 1ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்.
விர்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 'அவதார்கள்'
எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் அது ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. பூமியிலிருந்து சுமார் 650 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவிவட்ட பாதையில் அது நிலைநிறுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. விண்வெளியில் உள்ள மிகமாலை, தூசு, கருந்துளைகள் மற்றும் வாயுக்களின் மேகக் கூட்டமான "நெபுலா" உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க இந்த பி.எஸ்.எல்.வி சி-58 ரக ராக்கெட்டை பயன்படுத்தி தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளியில் மின்சாரம் மற்றும் நீரை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளனர். இந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் அனுப்பப்பட்ட "Fuel Cell" மூலம் தான் இந்த மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
விண்வெளியில் இந்த ராக்கெட்டோடு பொருத்தப்பட்டுள்ள கருவி இயக்கப்பட்டு 100 வாட் மின்சாரம் தற்பொழுது வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் அளித்த விளக்கத்தில் "ஹைட்ரஜன் செல் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியால் தான் இந்த மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த இவற்றுக்கும் இடையே நடக்கும் வேதியல் மாற்றங்களில் மின்சாரம் உருவாகுகிறது என்றும், மேலும் இறுதியாக இந்த மாற்றத்தின் உபரியாக நீரும் நமக்கு கிடைக்கிறது என்றும் அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனையாக பார்க்கப்படுகின்றது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.