கர்நாடகாவில் JN.1 வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடகாவில் JN.1 வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான கர்நாடக அரசின் அமைச்சரவை துணைக் குழு நேற்று தடுப்பு நடவடிக்கைகளை வழங்கி உள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், பாதிக்கப்பட்ட நபர்களை ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் அறிகுறிகளுடன் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி உள்ளது. மேலும் முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் 'முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி' போடுமாறு அறிவுறுத்தியது. இதை எளிதாக்கும் வகையில், 30,000 டோஸ் கார்பெவாக்ஸ் தடுப்பூசியை மத்திய அரசிடம் இருந்து வாங்க கர்நாடக அரசு முடிவு செய்தது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் "-அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். குழந்தைகள், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பரிசோதனையும் செய்யப்படும். கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாவிட்டால் ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் “வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் பணிபுரியும் அனைவருக்கும் கட்டாய தற்செயல் விடுப்பு வழங்கப்பட வேண்டும், அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு சிறப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டும், இது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்,” என்று தெரிவித்தார்.
சமீபத்திய எண்ணிக்கையின்படி, கர்நாடகாவில் 34 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு உறுதியானது. நாடு முழுவதும் 69 பேருக்கு JN.1 பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் கர்நாடகாவில் தான் அதிகபட்சமாக 34 பேருக்கு பாதிப்பு உள்ளது. எனினும் கொரோனா குறித்து தற்போது பீதி அடையத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்..
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்யுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாநிலத்தில் இறப்பு தணிக்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை, கர்நாடக முதல்வர் சித்தராமையா மாநிலத்தில் கொரோனா வைரஸின் JN.1 துணை மாறுபாடு தொடர்பான நிலைமையை மதிப்பிடுவதற்காக உயர்மட்டக் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் முகக்கவசம் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.