இடது கை வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நேற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் தலைவர் டிகே சிவக்குமார் குணமடைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தொற்று நோய் காரணமாக சித்தராமையா பல நாட்களாக இடது கையில் வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சித்தராமையாவுக்கு பெங்களூரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. வலியால் எங்கும் செல்ல முடியாத சித்தராமையா வீட்டில் ஓய்வெடுத்தார். பின்னர் வெள்ளிக்கிழமை மாலை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்பாடு செய்திருந்த முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் மைசூர் சென்றார்.
முன்னதாக, சித்தராமையாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரவிக்குமார், வைரஸ் ஹெர்பெஸ் தொற்று காரணமாக சித்தராமையாவின் கை வீங்கியுள்ளதாகத் தெரிவித்து இருந்தார். வலியை பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மன அழுத்தத்தால் தொற்று ஏற்படலாம். அதற்கு 15 நாட்கள் ஓய்வு தேவை. இது தவிர சித்தராமையாவின் உடல்நிலை நன்றாக உள்ளது என்று தெரிவித்து இருந்தனர்.
டி.கே சிவகுமார்:
வியாழக்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட அவர், பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ஓய்வுக்குப் பின்னர் சகஜ நிலைக்கு வந்து இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.