Karnataka Election Result 2023 Live: கர்நாடக தேர்தல் - நட்சத்திரத் தொகுதிகளில் முன்னிலை நிலவரம் என்ன?

By SG Balan  |  First Published May 13, 2023, 7:26 AM IST

கடந்த மே 10ஆம் தேதி நடந்த கர்நாடக மாநிலத்தின் 16வது சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 73.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.


கடந்த மே 10ஆம் தேதி நடந்த கர்நாடக மாநிலத்தின் 16வது சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 73.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

1985ஆம் ஆண்டிலிருந்து கர்நாடக மாநிலத்தில் எந்தக் கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது இல்லை. ஆளும் பாஜக இந்த வரலாற்றை மாற்றி அமைக்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. அதே சமயம் ஆட்சியைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது.

Latest Videos

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பல காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்று கணித்துள்ளன. ஆனால், தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. அப்படியானால், ஜேடிஎஸ் ஆதரவைப் பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகும்.

இச்சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அரசியல் வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. இந்தத் தேர்த்லில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் சில தொகுதிகள் சிறப்பு கவனம் பெற்றுள்ளன.

வருணா:

முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் வி. சோமண்ணா இவரை எதிர்த்துப் போட்டியிகிறார். கடந்த முறை பதாமி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா பாஜகவைச் சேர்ந்த பி. ஶ்ரீராமுலுவை 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சோமண்ணா கடந்த முறை கோவிந்த்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் பிரியா கிருஷ்ணாவை 11,375 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கனகபுரா:

கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் இவரை எதிர்த்து ஆளும் பாஜகவைச் சேர்ந்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோகா போட்டியிடுகிறார். அசோகா கனகபுரா தொகுதி தவிர பத்மநாபநகர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளரான ரகுநாத் நாயுடுவை எதிர்த்தும் அசோகா போட்டியிடுகிறார். டிகே சிவகுமார் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாராயண கவுடாவை விட 79,909 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் பத்மநாப நகர் தொகுதியில் மட்டும் போட்டியிட்ட ஆர். அசோகா காங்கிரஸ் வேட்பாளர் வி.கே. கோபாலை விட 32,166 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

ஹூப்ளி - தர்வார்டு சென்ட்ரல்:

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஜெகதீஸ் ஷெட்டர் ஹூப்ளி - தர்வார்டு சென்ட்ரல் தொகுதியில் களம் கண்டுள்ளார். ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த இவர் கர்நாடக முதல்வராகவும் பதவி விகித்தர். ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக தனக்கு வாய்ப்பு வழங்காத அதிருப்தியில் அக்கட்சியில் இருந்து விலகி சேர்ந்தார். லிங்காயத் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மகேஷ் டெங்கினகை. இதே தொகுதியில் கடந்த தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர் 21,306 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

சென்னப்பட்டனம் தொகுதி:

முன்னாள் முதல்வர் குமாரசாமி சென்னப்பட்டணம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவில் சார்பில் நடிகரும் தொழிலதிபருமான சி.பி. யோகேஷ்வராவும் காங்கிரஸ் கட்சி சார்பில் கங்காதரும் போட்டியில் உள்ளனர்.

அதானி தொகுதி:

லிங்காயத் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள தொகுதி இந்தத் தொகுதியில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. சீட் கிடைக்காத அதிருப்தியில் அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய மற்றொரு மூத்த தலைவர் லட்சுமண் சவடி. தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கும் இவர், அதானி தொகுதியில் களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் குமதள்ளி.

ஷிக்கான் தொகுதி:

ஆளும் பாஜகவின் முதல்வர் பவசவராஜ் பொம்மை ஷிக்காவன் தொகுதி தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யாசிர் அகமது கான் பதான் போட்டியிடுகிறார். பசவராஜ் பொம்மை அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையிலும் இவர் இத்தொகுதியில் வெற்றி பெறுவார் எனவே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

உடுப்பி:

உடுப்பி தொகுதியில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஹிஜாப் விவகாரத்தின் மூலம் பிரபலமான யஷ்பால் சுவர்ணா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் பிரசாத்ராஜ் காஞ்சன், ஜேடி(எஸ்) சார்பில் தக்ஷத் ஆர். ஷெட்டி ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

ஹாசன் தொகுதி:

மும்முனை போட்டியே காணப்படும் முக்கியத் தொகுதிகளில் ஒன்று ஹாசன் தொகுதி. இதில் பாஜக சார்பில் பிரீதம் ஜெ கவுடா, காங்கிரஸ் சார்பில் பனவாசி ரங்கசாமி, ஜேடிஎஸ் சார்பில் ஸ்வரூப் ஹெச். எஸ். பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் ப்ரீதம் கவுடா 13,006 வாக்குகள் வித்தியாசத்தில் ஜேடிஎஸ் வேட்பாளர் பிரகாஷைத் தோற்கடித்திருந்தார்.

click me!