கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எங்களிடம் ' Plan B' இருக்கு.. பாஜக அமைச்சர் சொன்ன தகவல்..

Published : May 12, 2023, 07:15 PM IST
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எங்களிடம் ' Plan B' இருக்கு.. பாஜக அமைச்சர் சொன்ன தகவல்..

சுருக்கம்

பா.ஜ.க.வுக்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் வகையில் "பிளான் பி" உள்ளது கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை, மே 13-ம் தேதி வெளியாக உள்ளது. பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில் பாஜக உள்ளது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கின்றன. தொங்கு சட்டமன்றம் அமைய சாத்தியக்கூறு இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க.வுக்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் வகையில் "பிளான் பி" உள்ளது கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.

இதுகுறிது பேசிய அவர் “ எங்கள் பிளான் பி வித்தியாசமானது. நாங்கள் அவசரப்படவில்லை. முடிவைப் பார்த்து முடிவு செய்வோம். இந்தத் திட்டம் குறித்த இறுதி முடிவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுப்பார்கள் என்று கூறினார்.

பாஜகவின் "பிளான் பி"யின் பிரத்தியேக அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பதிலளித்த அவர், அரசியலிலும் போரிலும் ஒருவர் தங்கள் அனைத்து உத்திகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாது என்று கூறினார். இருப்பினும், பாஜக வெற்றி பெறும் என்றும், "வெற்றி  நமதே" என்றும் உறுதியாக கூறினார்.

"ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு திட்டம் உள்ளது. எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. இதை ஏற்கனவே இரண்டு முறை கர்நாடகாவில் செய்துள்ளோம்" என்று அமைச்சர் மேலும் கூறினார். தொங்கு சட்டசபை ஏற்பட்டால், ஜே.டி.எஸ் உடன் கூட்டணி வைப்பதா இல்லையா என்பது குறித்து மத்திய பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த ஆர் அசோகா, பெங்களூருவில் உள்ள பத்மநாபநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். மேலும் கனகபுராவில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் 224 இடங்கள் உள்ளன. 2018 தேர்தலில், பாஜக 104 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 80 இடங்களையும், JD(S) 37 இடங்களையும் பெற்றுள்ளது. அந்த நேரத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் மற்றும் JD(S) கூட்டணி அமைக்க முயன்று, தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவின் பிஎஸ் எடியூரப்பா உரிமை கொண்டாடி ஆட்சி அமைத்தார்.

இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, மூன்று நாட்களுக்குள் அது கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி குமாரசாமியை முதலமைச்சராகக் கொண்டு ஆட்சி அமைத்தது, ஆனால் இந்த கூட்டணி ஆட்சி 14 மாதங்களில் கவிழ்ந்தது. 17 ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மற்றும் அவர்கள் பாஜகவில் இணைந்ததால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது. தொடர்ந்து 2019ல் நடந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி 15ல் 12 இடங்களை கைப்பற்றியது. தற்போது கர்நாடக சட்டசபையில், ஆளும் பாஜகவுக்கு 116 எம்எல்ஏக்களும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 69 மற்றும் ஜேடி(எஸ்) 29 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

இதையும் படிங்க : இனி இந்த செயலி மூலம் ரயிலின் நிகழ் நேரத்தை ஈசியா ட்ராக் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!