தசரா திருவிழாவில் பட்டாசு சத்தத்தை கேட்டு மிரண்ட யானை… தலைதெறித்து ஓடிய பொதுமக்கள்.!

By manimegalai aFirst Published Oct 9, 2021, 6:51 PM IST
Highlights

பட்டாசு சத்தம் கேட்டு மிரண்ட யானையை பாகன் கட்டுப்படுத்த முயற்சித்தர். அருகில் இருந்த கும்கி யானையும், சேர்ந்து ஆசுவாசப்படுத்தியதால் சாமி ஊர்வலம் வெற்றிகரமாக முடிந்தது.

பட்டாசு சத்தம் கேட்டு மிரண்ட யானையை பாகன் கட்டுப்படுத்த முயற்சித்தர். அருகில் இருந்த கும்கி யானையும், சேர்ந்து ஆசுவாசப்படுத்தியதால் சாமி ஊர்வலம் வெற்றிகரமாக முடிந்தது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் மாண்டியாவிலும் தசரா விழா கொண்டடப்படும். மைசூருவில் தசரா விழா கொண்டாடப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே மாண்டியாவில் உள்ள சாமூண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா விழா நடைபெறும்.

அதன்படி, மாண்டியா மாவட்டம் ஸ்ரீர ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இன்று தசரா விழாவுக்கான சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமுண்டீஸ்வரி அம்மனை யானையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தசரா விழா நடைபெறும். அப்படி, சாமுண்டீஸ்வரி அம்மனை தங்க அம்பாரியில் வைத்து யானை சுமந்துசென்ற போது விழாவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததைக் கண்டு ஒரு கட்டத்தியில் யானை மிரண்டது.

மதம் பிடித்ததைப் போல் யானை பிலிறியதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மிரண்டுபோன யானையை அதன் பாகன் கட்டுப்படுத்த முயற்சித்தார். அருகில் இருந்த கும்கியும், கோபால்சாமி யானையை ஆசுவாசப்படுத்தியது. சிறிது நேரம் மிரண்ட யானை பின்னர் அமைதி நிலைக்கு திரும்பியது. இதையடுத்து தசரா விழாவிற்கான சாமி ஊர்வலம் வெற்றிகரமாக முடிந்தது. யானை மிரண்டதைக் கண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தது தசரா விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!