கொரோனா தடுப்பூசி போடலியா..? ஆபிசுக்கு வர தடை… முதல்வர் அதிரடி

By manimegalai aFirst Published Oct 8, 2021, 8:27 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அலுவலகம் வர அனுமதி இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அலுவலகம் வர அனுமதி இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உலகையே ஒரு உலுக்கு உலுக்கிய கொரோனா தொற்று இந்தியாவையும் போட்டு தாக்கியது. டெல்லி, மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், கர்நாடகா என பெரும்பாலான மாநிலங்கள் கொரோனா பிடியில் சிக்கி தத்தளித்தது.

தலைநகர் டெல்லியில் கொரோனா உச்சத்தில் இருந்ததை தொடர்ந்து அதிரடி சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை டெல்லி அரசு முன்பை காட்டிலும் வேகப்படுத்தி உள்ளது.

அதன் முக்கிய அம்சமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு அலுவலர்கள் பணிக்கு வர அனுமதி இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வரும் 16ம் தேதிக்கு பின்னர் கொரோனா முதல் தடுப்பூசி போடாதவர்கள் அலுவலகம் வரக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளார்.

அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு இருக்க வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்கள் வரும் 16ம் தேதிக்கு பின்னர் அலுவலகம் வர அனுமதி இல்லை, அவர்கள் அலுவலகம் வராத நாட்கள் அனைத்தும் விடுமுறை தினமாக கருதப்படும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

click me!