கொரோனா.. மீண்டும் காத்திருக்கும் ஆபத்து… மக்களை எச்சரிக்கும் மத்திய அரசு

By manimegalai aFirst Published Oct 8, 2021, 8:02 AM IST
Highlights

பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்டதால் மக்கள் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

டெல்லி: பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்டதால் மக்கள் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

உலகையே உண்டு, இல்லை என்று பண்ணி வரும் கொரோனா இந்தியாவை புரட்டி போட்டது. இன்னமும் பாடாய்படுத்தி கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பதிவாகி வருகிறது.

தற்போதைய நிலையில் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் குறைந்துவிட்டது. ஆனாலும் 3வது அலை பற்றிய எச்சரிக்கைகளை மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்டு மக்களை அலர்ட் செய்து வருகிறது.

இப்போது பண்டிகை காலம் தொடங்கிவிட்டது….நாடு முழுவதும் பண்டிகை கொண்டாட்டம் என்ற மனோநிலையில் மக்கள் உள்ளனர். அதன் காரணமாக போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஷாப்பிங், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் என எங்கு பார்த்தாலும மனித தலைகள் அதிகம் தென்படுகின்றன.

நவராத்திரி விழா தொடங்கிவிட்டதாலும், தீபாவளி பண்டிகை காத்திருப்பதாலும் மக்கள் கடும் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இணைய செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது: பண்டிகை காலங்களில் மிகுந்த கவனத்துடன் இருங்கள். தீபாவளி தினத்தில் பெரும்பாலும் ஆன்லைன் வழியாக உங்களின் அன்புக்கு பாத்திரமானவர்களை சந்திதது வாழ்த்துங்கள்.

தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ளுங்கள். சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள் என்று கூறி அலர்ட் செய்திருக்கிறார்.

click me!