
திருவனந்தபுரம்: மதிய உணவை வெறும் 10 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை கேரள அரசு தொடங்கி உள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரசு பட்ஜெட் தாக்கலின் போது பசி இல்லாத கேரளா என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த திட்டம் கொச்சி நகரத்தில் தொடங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் அனில் குமார் தலைமையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
முதல் நாளான இன்று முற்பகல் 11.30 மணிக்கு 1500க்கும் மேற்பட்டோர் மதிய உணவை அருந்தினர். அவர்களுக்கு சாப்பாடு, சாம்பார், கறி, ரசம் உள்ளிட்டவை தரப்பட்டன.
10 ரூபாய்க்கு அருமையான சாப்பாடு கிடைக்கிறது, நன்றாக சுவையாக இருந்தது என்றும் அதை சாப்பிட்டவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.