RIP PRK: இன்னிக்கு என்னை பாக்கணும்னு சொன்னார்…. அதுக்குள்ள… உருகிய கர்நாடக முதலமைச்சர்

By manimegalai aFirst Published Oct 29, 2021, 7:00 PM IST
Highlights

மாரடைப்பால் மறைந்த கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு: மாரடைப்பால் மறைந்த கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கன்னட திரையுலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் ராஜ்குமார். அப்பாவுக்கு பிள்ளை தப்பாது என்பது போல அவரது இளையமகன் புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகின் முன்ணி நடிகராக விளங்கியவர்.

இன்று காலை சதாசிவநகரில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வசந்த நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனை கொண்டு வரும் வழியிலேயே அவரது இதயதுடிப்பு நின்று போனது. ஆனாலும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போராடினர். எதற்கும் பலனில்லாமல் போகவே அவர் இறந்து போய்விட்டதா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

அவரது மரணம் கன்னட திரையுலகத்தை மட்டுமல்லாது இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சியில் கொண்டுபோய்விட்டது. கர்நாடகமே ஸ்தம்பித்து போக, கல்வி நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டன. அவரது மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகத்தினர், சமூக அமைப்புகள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் இருந்து புனித் ராஜ்குமார் உடலானது அவரது இல்லத்தில் அனைவர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. மாலை 5 மணியளவில் கன்டிருவா உள்ள விளையாட்டு அரங்கத்துக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

மறைந்த புனித் ராஜ்குமார் உடலுக்கு, முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, குமாரசாமி, நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். அவரின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, எஸ்எம் கிருஷ்ணா,சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திரையுலகை தாண்டி விளையாட்டு உலகத்தில் இருந்தும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக மருத்துவமனையில் புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் மொம்மை நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மறைந்த புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அவரது நாளை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பிறகு அவரது குடும்பத்தினர் எங்கு முடிவு செய்கிறார்களோ அங்கு இறுதி சடங்குகள் நடைபெறும்.

இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு அவரது ரசிகர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் சிறந்த அடையாளமாக, மனிதநேயமிக்க நபராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். இளம்வயதில் பல சாதனைகளை படைத்தவர்.

அவரின் இந்த மறைவு கன்னட திரையுலகத்துக்கு மட்டுமல்லாது, நாட்டுக்கே பெரிய இழப்பாகும். வெள்ளிக்கிழமை என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டிருந்தார். அதற்காக அவருக்கு நேரமும் ஒதுக்கி கொடுத்திருந்தேன்.

ஆனால் அதற்குள் இப்படி ஒரு துக்ககரமான நிகழ்வு நடந்துவிட்டது. புனித் ராஜ்குமாரின் இந்த திடீர் மறைவு எனக்கு மிகவும் பேரதிர்ச்சியை தந்திருக்கிறது என்று பசவராஜ் பொம்மை கூறி உள்ளார்.

click me!