போதைப் பொருளை பயன்படுத்த மக்களை அனுமதிக்க வேண்டும்… காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை கருத்து!!

By Narendran SFirst Published Oct 29, 2021, 12:31 PM IST
Highlights

மக்கள் வரி செலுத்தி போதைப் பொருளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பியும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான கே.டி.எஸ் துளசி சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின், மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 2ம் தேதி, மும்பை அருகே உல்லாசக் கப்பலில் நட்சத்திர விருந்து ஒன்றில் கலந்துக்கொண்டார். அந்த விருந்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக, போதைப் பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான குழுவினர் ஆர்யன் கான் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்யன் கான் வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆர்யன் கானின் ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டது பலரை சந்தேகத்தில் ஆழ்த்தியது. பின்னர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்துக்கொண்டிருகின்றன. மேலும் பலர் இந்த வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இத்தகை பரபரப்பான வழக்கில் இருந்து ஆர்யன் கான் நேற்றுதான் ஜாமீன் கிடைத்தது. சுமார், மூன்று வாரங்களுக்கு பின்னர் நேற்று தான் அவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருந்த போதிலும் ஆர்யன் கான் கைதான விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படுவதோடு பல்வேறு சர்ச்சைகள் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இத்தகைய சூழலில் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததோடு அதற்கு அனுமதியும் கேட்டுள்ளார்.

அதாவது மது, குட்கா, புகையிலை போல போதைப் பொருட்களையும் வரி செலுத்தி மக்கள் பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு அந்த காங்கிரஸ் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பியும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.டி.எஸ் துளசி, இதுக்குறித்து பேசுகையில், வரி செலுத்துவதன் மூலம் குட்கா, மது மற்றும் புகையிலை போன்ற பொருட்களை உட்கொள்ள அனுமதிப்பது போல போதைப் பொருட்களையும் அனுமதிக்க வேண்டும், போதைப் பொருட்கள் வலியை போக்குகின்றன. மது, குட்கா, புகையிலை கூட தீங்கு தான். ஆனால் அவற்றை வரி செலுத்தி நாம் வாங்கி பயன்படுத்துகிறோம். அப்படியிருக்க போதைப் பொருட்களுக்கு மட்டும் தடை ஏன்? போதைப் பொருட்களையும் வரி செலுத்தி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் 1985 சட்டத்தின் மூலம் பல நேரங்களில் மக்களுக்கு தொல்லை கொடுக்கப்படுவதால், குறிப்பிட்ட அளவில் போதை மருந்தை பயன்படுத்த வழிவகை செய்து அதற்கான சட்டத்தை சீரமைக்க வேண்டும் எனவும் துளசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது புதிய சர்ச்சையை தொடங்கியுள்ளதோடு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. 

click me!